ஆரிப் நகர் பகுதி சேர்ந்த பஷீர் இவருடைய மனைவி ரேஷ்மா இவர் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இதனை அறிந்த மர்ம நபர் திடீரென வீட்டுக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இதனை அறிந்த ரேஷ்மா கத்தி கூச்சலிடேவே அருகில் இருந்த இரும்புராடால் பலமாக தலையில் மர்ம நபர் தாக்கி விட்டு சென்றுள்ளார். பின்னர் அலறல் சத்தம் கேட்க அக்கம் பக்கத்தினர் ரேஷ்மாவின் வீட்டில் சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கிடந்தார் பின்னர் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.