கயத்தாறு அருகே உள்ள தளவாய்புரம் காட்டுப்பகுதியில் மதுபான கடையில் முருகன் மற்றும் மந்திரம் ஆகிய இருவர் மது அருந்திக் கொண்டிருக்கும் பொழுது காப்பு லிங்கம்பட்டி பகுதியைச் சார்ந்த கோமு என்பவர் இருவரையும் சரமாரியாக வெட்டி தப்பி ஓடினார் இதில் முருகன் கோவில்பட்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மந்திரம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுபான கடையில் கோமு வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது