மணப்பாறை: மணப்பாறை அருகே விவசாயிகள் திடீர் போராட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் அருகே இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் ஐயாகண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதில் பாரத பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மோடி கூறிய தேர்தல் வாக்குறுதியான விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது