திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே, நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அமுதவள்ளி. தனியார் பள்ளி ஆசிரியரான இவரது வீட்டின் அருகே தெருநாய் ஒன்று ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது. அந்த வீட்டிற்கும் பக்கத்து வீட்டு சுவற்றுக்கும் இடைப்பட்ட சந்து பகுதிக்குள் குட்டி நாய்கள் ஊர்ந்து சென்று, மீண்டும் வெளிவர தெரியாமல் மாட்டிக்கொண்டது. சுவற்றின் இடிபாடுகளுக்குள் சென்று சிக்கி சிக்கிக்கொண்ட குட்டி நாய்களை பத்திரமாக மீட்டு அதன் தாய் நாயிடம் ஒப்படைத்தனர்.