திண்டுக்கல் கிழக்கு: வத்தலகுண்டு பைபாஸ் அருகே கூலித் தொழிலாளியின் கழுத்தில் உடைந்த பீர்பாட்டிலை வைத்து பணம் பறித்த இளைஞர் கைது
திண்டுக்கல்லை சேர்ந்த அரவிந்த் என்பவர் வத்தலகுண்டு பைபாஸ் கழுதை ரோடு பிரிவு அருகே நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த பொன்னுமாந்துறை புதுப்பட்டி சேர்ந்த திவாகர் உடைந்த பீர் பாட்டிலை அரவிந்த் கழுத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி சட்டை பையில் வைத்திருந்த ரூ.1,100 பணத்தை பறித்து சென்றதாக அளித்த புகாரின் பேரில்தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் திவாகரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்