வேடசந்தூர்: அரசு மருத்துவமனையில் துணை முதல்வர் ஆரம்பித்து வைத்த நவீன வசதிகள் கொண்ட கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனிதநேய மக்கள் கட்சியினர் கோரிக்கை
வேடசந்தூர் தொகுதி அரசு தலைமை மருத்துவமனை வேடசந்தூர் வடமதுரை ரோட்டில் செயல்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த மருத்துவமனையில் விபத்து சிகிச்சை பிரிவிற்கு என்று புதியதாக 7 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் 25ஆம் தேதி திறந்து வைத்தார். இதனை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வேடசந்தூர் அரசு தலைமை டாக்டர். லோகநாதனிடம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.