தேன்கனிகோட்டை: கண்டகானப்பள்ளி கிராமத்தில் 40 தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் : விவசாயி வேதனை
ஓசூர் அருகே 40 தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் : விவசாயி வேதனை ஒசூர் அருகே தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள கண்டகானபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மாதாரெட்டி (45) இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 5 ஏக்கர் அளவில் கடந்த 5 ஆண்டுகளாக தென்னங்கன்றுகளை நட்டு டிராக்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சி நன்கு பராமரித்து வளர்த்து வந்தார். இந்த தென்னை மரங்கள் தற்போது நன்றாக வளர்ந்துள்ளன.