காஞ்சிபுரம்: பரந்தூர் தனியார் பள்ளியில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் மரக்கன்றுகளை நட்டனர்
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், பரந்தூர் தனியார் பள்ளியில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்றஉறுப்பினர்திரு.சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டார்கள். உடன் மாவட்ட வன அலுவலர் திரு.ரவி மீனா, இ.வ.ப., வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் திரு.ஆர்.கே.தேவேந்திரன் உள்ளார்.