திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில்பட்டியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இந்து மக்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மண்டு கருப்பணசாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து வன்னியர் தரப்பினர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தனர். இரு தரப்பினர் இடையே மோதல் போக்கும் ஏற்படும் சூழல் உருவாகும் என்பதற்காக 100க்கும மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.