வேடசந்தூர்: கணவாயில் அழுகிய முட்டகைகளை மர்மநபர்கள் கொட்டுவதால் பொதுமக்கள் அவதி
வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டியில் ரங்கமலை கணவாய் உள்ளது. இந்த பகுதி திண்டுக்கல் திருச்சி மாவட்ட எல்லை பகுதியாகவும் உள்ளது. இந்த நிலையில் சமீப காலமாக மர்ம நபர்கள் இப்பகுதியில் அழுகிய முட்டைகள், உணவு பண்டங்கள், மருத்துவ பொருட்கள் அனைத்தையும் கொட்டி விட்டு சென்று விட்டனர். கல்வார்பட்டி ஊராட்சி நிர்வாகம் அனைத்தையும் குழி தோண்டி புதைத்ததுடன் தீ வைத்து எரித்து தொடர்ந்து மக்களை பாதுகாத்து வந்தனர். இந்த நிலையில் இரவு மர்ம வாகனத்தில் வந்த நபர்கள் அழுகிய முட்டைகள் மற்றும் உணவுப் பொருட்களை கொட்டி விட்டு சென்றுள்ளனர்.