சிங்கம்புனரி: மாவட்டத்தில் அதிகபட்சமாக சிங்கம்புணரியில் 42.00 மி.மீட்டர் மழைபதிவு-மாவட்ட நிர்வாகம் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று இரவு மிதமான மழை பெய்தது. சிங்கம்புணரியில் 42 மி.மீ., சிவகங்கையில் 7.8 மி.மீ., திருப்பத்தூரில் 8 மி.மீ., காரைக்குடியில் 6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்ட சராசரி 7.09 மி.மீ., மொத்தம் 63.8 மி.மீ. மழை பெய்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.