திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் விடுமுறை தினம் என்பதால் குவிந்த பக்தர்கள்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கோவிலில் அதிகரித்து காணப்பட்டது. இவர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் ஏராளமான திருமணங்களும் நடைபெற்றன.