திருப்பத்தூர்: கே.வைரவன்பட்டியில் தவெக கொள்கை தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியார் பிறந்தநாளில் அவரின் திருவுருவ சிலைக்கு தவெகவினர் மாலை அணிவித்து மரியாதை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகே கே.வைரவன்பட்டி சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு தமிழக வெற்றிக் கழக (தவெக) உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தவெகவின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் சிவகங்கை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், திருப்பத்தூர், சிங்கம்புணரி நகரம், ஒன்றியம், கிளை மற்றும் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.