கயத்தாறு: அலங்காரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கோவில்பட்டி அருகே உள்ள குருமலை அலங்காரி அம்மன், கருப்பசாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து கும்ப கலசத்திற்கு கும்பநீரானது ஊற்றப்பட்டது பின்னர், அலங்காரி அம்மன் மற்றும் கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள்,அலங்காரம் தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதில் கோவில்பட்டி சுற்று வட்டார பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.