திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் மற்றும் நத்தம் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை
மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நல்ல கன மழை பெய்தது இதன் காரணமாக சாலைகள் மற்றும் தெருக்களை மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதே போல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்தது இதே போல நத்தம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய பலத்த மழை வெளுத்து வாங்கியது. மின் தடை இருந்த நேரத்தில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்