நத்தம்: லிங்கவாடியில் இரு தரப்பினரிடையே மோதல் மூன்று பேர் காயம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே லிங்கவாடியில் இளைஞர்கள் இருசக்கர வாகனம் ஓட்டி வந்ததில் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் லிங்கவாடி வடக்கு தெருவை சேர்ந்த ஒரு பிரிவினருக்கும் கிழக்கு தெருவை சேர்ந்த ஒரு பிரிவினருக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் வடக்கு தெருவை சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 5 பேர் காயம்.இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.