வேடசந்தூர்: பாறைப்பட்டி பிரிவு அருகே லாரி மோதியதில் நெடுஞ்சாலை துறை அதிகாரியின் கால் சுக்குநூறாக நொறுங்கியது
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஏழுமலையான் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் மாநில நெடுஞ்சாலை துறையில் ரோடு ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு ஸ்கூட்டரில் திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ள டி.என்.பாறைப்பட்டி பிரிவு அருகே திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற லாரி ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. இதில் முருகனுக்கு கால் சுக்குநூறாக நொறுங்கியது.