திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படைவீரர் கொடிநாள்-2025 நிதி வசூலை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் நிதி வழங்கி தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற முன்னாள் படைவீரர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கான தேநீர் உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 17 பயனாளிகளுக்கு ரூ.4.00 இலட்சம் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட மகன் அல்லது மகளை இராணுவப் பணிக்கு அனுப்பிய பெற்றோருக்கு போர்ப்பணி ஊக்க மானியம் வழங்கினார்.