திண்டுக்கல் கிழக்கு: சௌராஷ்ட்ராபுரத்தில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை
திண்டுக்கல் சௌராஷ்ட்ராபுரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் கணேசன்(65) இவர் குடும்பப் பிரச்சனை காரணமாக கடந்த ஒரு வருடங்களாக ஆர்த்தி தியேட்டர் ரோடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் மன உளைச்சலில் விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கணேசனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.