சேந்தமங்கலம்: நைனாமலையில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் மலைக்கு செல்ல தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே நைனாமலையில் அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் மலைக்கு செல்ல ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜையில் அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார்