பேரூர்: நரசிபுரம் பகுதியில் காட்டு யானை அட்டகாசம் முதியவர் படுகாயம் மக்கள் பீதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம்
நரசிபுரம் வெள்ளிமலைப்பட்டினம் பகுதியில் ஒரு ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. அப்போது சாலையோரத்தில் இருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியது. தொடர்ந்து, கோவிலுக்கு பூ பறிக்க சென்ற 90 வயது முதியவரை தாக்கியதில் அவர் இரண்டு கால்களும் முறிந்து படுகாயம் அடைந்தார்.