திண்டுக்கல் கிழக்கு: பேருந்து நிலையம் அருகே நள்ளிரவில் திருநங்கைகளுக்கும் ஆட்டோ ஓட்டுனருக்கும் இடையே கடும் மோதல். பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்
திண்டுக்கல் பேருந்து நிலையம் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்து பயணிகள் அதிக அளவு வந்து செல்லக்கூடிய பேருந்து நிலையமாக திகழ்கிறது. இந்த நிலையில் நள்ளிரவு ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச் செல்வதில் திருநங்கைகளுக்கும் - ஆட்டோ ஒட்டுநர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சூழ்நிலை உருவானது திருநங்கைகள் 10 -க்கும் மேற்பட்டோர் ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் பேருந்து நிலையம் அருகே திருவள்ளுவர் சாலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பு.