சாத்தான்குளம்: சாத்தான்குளம் அழகம்மன் மற்றும் வண்டிமலச்சி அம்மன் திருக்கோவிலில் தசரா கொடியேற்றம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அழகம்மன் திருக்கோவில் மற்றும் வண்டிமலச்சி அம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை முன்னிட்டு கொடிபட்டம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு பின்னர் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் மேளதாளங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. இதில், ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.