தூத்துக்குடியில் 50க்கும் மேற்பட்ட கருவாடு உற்பத்தி நிறுவனங்கள் மூலம் கருவாடு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக கருவாடு உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது மழை இல்லாதபோதும் சுட்டரிக்கும் வெயில் இல்லாததால் கருவாடு காய வைப்பதில் சிரமம் ஏற்பட்டு உற்பத்தி குறைந்து வருவதாக கருவாடு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.