மேட்டுப்பாளையம்: தோலம்பாளையம் மற்றும் வெள்ளியங்காடு ஊராட்சிகளுக்கு நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்கள் மனு அளித்தனர்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளியங்காடு மற்றும் தோலம்பாளையம் ஆகிய இரண்டு ஊராட்சிகளை ஒருங்கிணைத்து உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளியங்காடு பகுதியில் நடைபெற்றது 15க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்ற இந்த முகாமில் அந்த ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனுஅளித்தனர்