சூளகிரி: ரவுண்டானாவில் சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினர் கைது: மண்டபத்திலும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் சுமுக முடிவு
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் விசிகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், கோஷ்டி மோதல் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒரு தரப்பினர் திடீர் சாரி மட்டும் ஈடுபட்டதால் சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரி போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.. மண்டபத்திலும் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்த நிலையில் சூளகிரி வட்டாட்சியர் கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் எஸ் பி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்..