வேடசந்தூர்: ஆத்துமேட்டில் வேடசந்தூர் ஒன்றிய தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க போராட்ட ஆயத்த கூட்டம்
இதில் பணியாளர்கள் அனைவருக்கும் பாராபட்சம் இன்றி எந்தவித நிபந்தனையும் இல்லாமல் இருவது சதவீத ஊதிய உயர்வுடன் ஏற்கனவே வழங்கிய 10 சதவீத ஹச் ஆர் ஏ வழங்க கோருதல், 2021க்கு பிறகு ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் கருணை ஓய்வூதியத்தினை ஐந்தாயிரம் ஆக உயர்த்தி வழங்க கோருதல், நியாயவிலை கடைகளில் விற்பனையாளர்களுக்கு பணிப்பளுவை போக்கும் வகையில் வெளிப்பணி முறையில் எடையாளரை நியமித்துக் கொள்ள அனுமதி கோருதல் உள்பட 25 கோரிக்கைகளை நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.