வடமதுரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் குணசேகரன் இவரிடம் மும்பை போலீசார் போல் பேசி தீவிரவாதிகளுடன் பணப்பரிவர்த்தனை உள்ளது என மிரட்டி வெளியே சொன்னால் குடும்பத்தோடு கைது செய்து விடுவோம் என்று பயத்தை ஏற்படுத்தி டிஜிட்டல் கைது செய்திருப்பதாக கூறியதைத் தொடர்ந்து குணசேகரன் பயத்தில் 2 தவணைகளாக டிஜிட்டல் கைது கும்பலிடம் ரூ.21 லட்சத்தை இழந்தார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குணசேகரன் திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்