தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் இந்த திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டிருந்தார்.