ஊத்துக்கோட்டை: பிச்சாட்டூர் அணையில் இருந்து ஆரணி ஆற்றுக்கு உபரி நீர் வெளியேற்றம் 400 கன அடியாக குறைப்பு
தொடர் கன மழை காரணமாக ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று மதியம் 628 கன அடியாக இருந்தது அது இன்று மாலை 600 கன அடியாக குறைந்தது,அணையின் மொத்தம் 31 அடியில் தற்போது 28 அடி உயரத்தில் நீர் இருப்பு இருந்து வருகிறது. அதேபோன்று 1.853 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையில் 1.525 டிஎம்சி இருந்து வருகிறது.