திண்டுக்கல் கிழக்கு: செம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு பாதசாரிகளுக்கு சிவப்பு ஒளிரும் பட்டை வழங்கப்பட்டது
பழனி முருகன் கோயிலுக்கு பாதை யாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் சிவப்பு பட்டை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. செம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பழனிக்கு பாதயாத்திரை ஆக சென்ற பக்தர்களுக்கு திண்டுக்கல் மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த் விழிப்புணர்வு துண்டு பிரசாரமும் ஒளிரும் சிவப்பு பட்டயம் தெரியும் அணிவித்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.