திருவள்ளூர்: திருவள்ளூர் ஆட்சியரை கண்டித்து மீனவர்கள் 1ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் அண்மையில் ஆட்சியரை சந்திக்க சென்றபோது மீனவர்களை அலுவலகத்தில் உள்ளே அனுமதிக்காமல் இழிவுபடுத்தி அவமதித்து அனுப்பியதாக கூறி 1ம் தேதி ஆட்சியரை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக மீனவர்கள் அறிவித்தனர் அண்மையில் போராட்டத்திற்கு அனுமதி கேட்டு காவல்துறையிடம் மீனவர்கள் மனு அளித்த போது வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் முன்னிலையில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.