பெரம்பூர்: மாதவரம் மூலக்கடை பகுதியில் அரசு மாநகர பேருந்தில் பள்ளி மாணவர்கள் கூரையில் ஏறிக்கொண்டு மற்றும் தரையில் தேய்த்துக் கொண்டு ஆபத்தான முறையில் பயணித்தனர்
சென்னை மாதவரம் மூலக்கடை பகுதியில் அரசு மாநகர பேருந்து தடம் எண் 64 எம் சென்ட்ரலில் இருந்து மாதவரம் எம் எம் டி வரை செல்லக்கூடிய பேருந்தில் அரசு பள்ளி மாணவர்கள் ஐந்து மேற்பட்டோர் ஏறிக்கொண்டு கூரை மீது ஏறியும் சாலையில் காலை தேய்த்துக் கொண்டும் ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொண்டனர் இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது இதன் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை