காரியமங்கலம்: காவேரிப்பட்டினம் பாலக்கோடு சாலையில் இருசக்கர வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு,காரிமங்கலம் போலீஸ் விசாரணை
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த சாலநாய்கனஅள்ளி பகுதியைச் சேர்ந்த சபரி. 27. மேஸ்திரி இருசக்கர வாகனத்தில் எர்ர சீகனஹள்ளி - காவேரிப்பட்டினம் செல்லும் சாலையில்,இருசக்கர வாகனத்தில் சென்றபோது காவேரிபட்டினம். பாலக்கோடு நோக்கிச் சென்ற KTM மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் , சபரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இவரது இறப்பு குறித்து , காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ,