தேவகோட்டை: தேவகோட்டை ஸ்ரீ கலங்காத கண்ட விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேரோட்டம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வெள்ளையன் ஊரணி ஸ்ரீ கலங்காத கண்ட விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் விநாயகர் வீற்றிருந்தார். மாலை 5 மணிக்கு பெண் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது. பக்தர்கள் வழிநெடுகிலும் தரிசனம் செய்தனர். இரவு 8 மணிக்கு மலர் அலங்காரத்தில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்