வேடசந்தூர்: வடமதுரையில் முன் விரோதம் காரணமாக மண்ணெண்ணெய் குண்டு வீச்சு
வேடசந்தூர் தாலுகா வடமதுரை தமிழர் தேசம் கட்சி நகரச் செயலாளர் இருப்பவர் செந்தில்குமார் வயது 52. இவரது மகன் ஹரீசுக்கும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் சில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு போலீசில் வழக்கும் பதிவானது. இந்நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் செந்தில்குமார் வீட்டின் கதவின் கதவின் மீது மண்ணெண்ணெய் குண்டை வீசி சென்றனர். இதனால் ஏற்பட்ட தீயை அப்பகுதினர் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.