நிலக்கோட்டை: வத்தலக்குண்டு கம்ப்யூட்டர் சென்டரில் புகுந்த பாம்பு மாணவிகள் அலறியடித்து ஓட்டம்
வத்தலக்குண்டு காந்தி நகர் மெயின் ரோட்டில் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தின் மாணவி வாஷ்பேசினில் கை கழுவ சென்ற போது வாஷ்பேசனில் சுமார் 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் பாம்பு, பாம்பு என்று கத்தினார். பாம்பு என்றதும் சகமாணவிகள் அலறி அடித்துக் கொண்டு பயிற்சி மையத்திலிருந்து வெளியே ஓடினர். தகவலறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று பாம்பை பிடித்தனர்.