ஆத்தூர்: யூனியன் அலுவலகத்தில், 100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம், நிதி குறைப்பு, கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சார்பில், சட்ட நகலை கிழித்தெரியும் போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் (யூனியன்) அலுவலகத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்கின்ற பெயரை மாற்று நிதியை குறைத்து, 100 நாள் வேலைத்திட்டத்தை சீர்குலைக்க புதிய சட்டத்தை நிறைவேற்றிய, மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற, சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டத்திற்கு, ஆத்தூர் ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் ஆறுமுகவள்ளி தலைமை வகித்தார்.