திருத்தணி: அதிமுகவுடன் கூட்டணி வைக்க பல கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர் அதிமுக செய்தி தொடர்பாளர் ம வைகை செல்வன் பேட்டி
.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் அதிமுக முன்னாள் அமைச்சர், கழக இலக்கிய அணி செயலாளர், அதிமுக செய்தி தொடர்பாளர், வைகை செல்வன் இன்று காலை சாமி தரிசனம் செய்தார் , இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணிக்காக அதிமுக என்றும் ஏங்கியது கிடையாது, அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு தான் கோரிக்கை வைத்து பல கட்சிகள் கேட்டுக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்,