வேடசந்தூர்: நெகிழிப்பைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் வர்த்தகர் சங்கம் அறிவிப்பு
வேடசந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகள் பகுதிகளிலும் வேடசந்தூர் அனைத்து வர்த்தகர்கள் சங்கம், வேடசந்தூர் பேரூராட்சி, வாஸ் இன்ஸ்டிடியூட், வீகா பவுண்டேஷன் இணைந்து நடத்திய என் பை... என் பொறுப்பு... என்ற வாசகத்துடன் நெகிழி இல்லா வேடசந்தூரை உருவாக்க முதல் படியாக அனைத்து கடைகளிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப்பைகள் பயன்பாட்டை அறவே ஒழிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வர்த்தகர்கள் நெகிழிப்பைகளை பயன்படுத்தினால் பேரூராட்சி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கையில் வர்த்தகர் சங்கம் தலையிடாது என அறிவிப்பு.