விளாத்திகுளம்: சுப்பையாபுரம் கிராமத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த நபரின் குடும்பத்தை நேரில் சந்தித்து நிவாரண நிதி எம்எல்ஏ வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுப்பையாபுரம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குருமூர்த்தி என்ற விவசாயி மின்னல் தாக்கி உயிரிழந்தார் இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்த விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜீவி மார்க்கண்டேயன் முதலமைச்சரின் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 4 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கினார் நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.