நிலக்கோட்டை: ஸ்ரீ சங்கிலி கருப்பணசாமி கோவில் திருவிழா முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்கள்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் ஸ்ரீ சங்கிலி கருப்பணசாமி, ஸ்ரீ மதுரை வீரன் கோவில் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது மூன்று நாட்கள் நடந்த விழாவில் பக்தர்கள் திருவிளக்கு பூஜை நடத்தியும் பொங்கல் வைத்தும் வழிபட்டனர் இதனைத் தொடர்ந்து விவசாயம் செழிக்க வேண்டியும், மழை பொழிய வேண்டியும், நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக்கடன் கடன் செலுத்தினர்.