திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ரூ.5 ஆயிரம் வரை விற்ற ஒரு கிலோ மல்லிகைப்பூ நேற்று ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.1,300 வரை விற்பனை ஆன முல்லைப் பூ ரூ.600 முதல் ரூ.700-க்கு விற்பனையாகியது. அதேபோல் ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை ஆன கனகாம்பரம் ரூ.600-க்கும், ரூ.140-க்கு விற்ற சம்பங்கி ரூ.80-க்கு விற்கப்பட்டது. மற்ற பூக்களில் பெரிதாக விலைமாற்றம் இல்லை. அதன்படி ஜாதிப்பூ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.100-க்கும், பிச்சிப்பூ ரூ.350-க்கும், பன்னீர் ரோஸ் ரூ.100-க்கும், செண்டுமல்லி ரூ.40-க்கும், கோழிக்கொண்டை ரூ.80-க்கும் விற்பனை.