தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே நெய்விலைப் பகுதியை சேர்ந்த பாலசதீஷ்குமார் (23) என்பவர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு வந்த எஸ்ஐ சுந்தரம் தலைமையிலான போலீசார் பால சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.