திண்டுக்கல் கிழக்கு: இளம் பெண் வெட்டி படுகொலை செல்லமந்தாடி அருகே மர்ம நபர் வெறிச்செயல்
சீலப்பாடி வடக்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் மகள் மீனா என்ற மீனாட்சி(25) இவர் ஓடைப்பட்டி அருகே உள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார். திங்கட்கிழமை மாலை பழைய கரூர் சாலை செல்லமந்தாடி ரயில்வே பாலம் கீழே மர்ம நபர்களால் மீனா என்ற மீனாட்சி அரிவாளால் முகம் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து விரைந்து சென்ற தாடிக்கொம்பு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கா திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை