ஆவடி: குமணன்சாவடியில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி அரவிந்த் கண் மருத்துவமனை அருகில் கஞ்சாவை விற்பனை செய்ய ஆண் ஒருவர் எடுத்து வருவதாக கிடைத்த இரகசிய தகவல் போலீசாருக்கு கிடைக்கப்பெற்றது   இந்நிலையில் இன்று காலை பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு  போலீசார் சோதனை மேற்கொண்டனர், சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்துக்கொண்டிருந்த சந்தேக நபரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் சுமார் 10 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது