ஆவடி: ஐயப்பன் தாங்கல் பகுதியில் கழிவு நீர் தொட்டியில் விழுந்த பசு மாடு ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டது.
சென்னை ஐயப்பன் தாங்கல் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமலையானது பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் மற்றும் குட்டைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. அதுமட்டுமின்றி சாலையோரம் இருக்கும் சிறிய பள்ளங்களும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில் ஐயப்பன்தாங்கல் விஜிஎன் நகர் பகுதியில் வீடு ஒன்றின் வெளியே அமைக்கப்பட்டிருந்த பழமையான கழிவு நீர் தொட்டியில் பசு மாடு ஒன்று இன்று காலை உள்ளே விழுந்தது. அதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி மீட்டனர்.