திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டியில் அரசினர் மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியின் அருகே உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.இந்த மின்கம்பம் முழுவதும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தை மாற்றி புதிதாக மின்கம்பம் நட்டு தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.