திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் வெளியே சிஐடியு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், மத்திய மோடி அரசு, நவீன தாராளயமயக் கொள்கையின் ஒரு பகுதியாக சீர்திருத்தம் என்ற பெயரில் 29 தொழிலாளர் சட்டங்களை 4 சட்ட தொகுப்புகளாக மாற்றி நவம்பர் 21ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.