திண்டுக்கல் கிழக்கு: கிறிஸ்தவ வன்னியர்களை எம்பிசி பட்டியலில் இணைக்க கோரி மணிக்கூண்டு பகுதியில் கிறிஸ்தவ மக்கள் முன்னணி சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் கிறிஸ்துவ மக்கள் முன்னனி மற்றும் கிறிஸ்தவ வன்னியர் கழகம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்தவ வன்னியர்களை எம்பிசி பட்டியலில் இணைக்க வேண்டும் நவம்பர் இரண்டாம் தேதி கல்லறை திருவிழாவிற்கு அரசு விடுமுறை வழங்க வேண்டும் வகுப்புவாத வன்முறை தடுப்பு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ோர் கலந்து கொண்டனர்.